Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

சென்னை நகரில் அரசு நகரப்பேருந்து அண்ணா மேம்பாலத்திலிருந்து ‌வேகமாக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40-ம் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சென்னை: சென்னை நகரில் அரசு நகரப்பேருந்து அண்ணா மேம்பாலத்திலிருந்து ‌வேகமாக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40-ம் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று மதியம் 2 மணியளவில் சென்னை அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பாலத்தில் இருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்து கீழே சாலையில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்திலிருந்த கீழ‌ே விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் அலறினர்.

42 பேர் காயம்: இதில் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பžஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பிரசாந்த், கண்டக்டர் ஹேமகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக பஸ்சி்ல் பயணித்தவர்களை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர்.

இந்த சம்பவத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சக பயணிகள் கூறுகையில், பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வளைவு ஒன்றில் வேகமாக திரும்பி போது தான் பஸ் கவிழ்ந்தது என்றார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கூடுதலாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பாண்டிபஜார் பகுதி போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும்சிலர் பஸ்சில் சிக்கியிருக்கிறார்களா என தேடும் பணி நடக்கிறது.பஸ் கீழே விழுந்த போது சாலையில் வாகனங்கள், மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் அறிந்த அமைச்சர் வளர்மதி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்