Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

நீயா நானா -கோபி

நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதிலிருந்து துவங்குவோம். நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் உங்களை குறித்த தகவல்களை nnshow@gmail.com என்கிற அவர்கள் மெயில் ஐ.டி.க்கு அனுப்ப வேண்டும். கூடவே போட்டோவும் அனுப்பினால் நலம். இப்படி அனைவரும் அனுப்பும் தகவல்களை எல்லாம் அவர்கள் தங்கள் டேட்டா பேசில் பதிந்து விடுகிறார்கள். பின் அவரவரும் குறிப்பிட்டுள்ள ஆர்வத்தை பொறுத்து அது சம்பந்தமான தலைப்பு வந்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். அப்போது நீயா நானா டீமில் இருந்து பேசுகிறோம் என தெரிவித்து விட்டு, தலைப்பை சொல்லி கருத்தை கேட்பார்கள். நீங்கள் முதலில் எந்த அணியில் (For or against) பேச விரும்புகிறீர்கள் என சொல்ல வேண்டும். சில நேரம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவில் பேச ஏற்கனவே நிறைய பேர் இருப்பார்கள். அப்போது நீங்கள் " சரி நான் அதற்கு எதிர் தலைப்பில் பேசுகிறேன்" என்றால், " இல்லீங்க. நீங்க முதலில் சொன்னது தான் உங்க உண்மையான வியூ. அதற்கு எதிர் அணியில் பேசினால், சரியாக இருக்காது " என சொல்லி விடுவார்கள் !! தலைப்பு பொருந்தி, போனில் நீங்கள் சொன்ன கருத்துகளும் பிடித்தால், மீண்டும் தொடர்பு கொண்டு என்றைக்கு படப்பிடிப்பு, நீங்கள் எத்தனை மணிக்கு வர வேண்டும் போன்ற தகவல்கள் தருவார்கள். இப்படி பேசுவது பெரும்பாலும் Visual Communication படிக்கும், அல்லது அப்போது தான் படித்து முடித்து கல்லூரி பெண்களாக இருக்கும் ! நீங்கள் பெரிய சொற்பொழிவு அல்லது உரை நிகழ்த்துவது போல் தயார் செய்து கொண்டு செல்வது சரிப்படாது. அந்த தலைப்பு குறித்து உங்கள் கருத்துகள், உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்கும் நிகழ்ந்த நிஜ அனுபவங்கள் ஒரு தாளிலோ மனதிலோ குறித்து வைத்து கொள்ளலாம். மற்றபடி பேசுவது அங்கு நடக்கும் விவாதத்தை ஒட்டியே அமையும். நீயா நானா ஒரு நாளைக்கு மூன்று ஷோ ஷூட்டிங் நடக்கிறது ! முதல் ஷோ காலை பதினோரு மணிக்கு துவங்கி மதியம் மூன்று மணி போல் முடிப்பார்கள். பின் ஓரிரு மணி நேரம் ப்ரேக் விட்டு மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு அடுத்த ஷோ துவங்குவார்கள். இது முடிய ஒன்பதரை அல்லது பத்து மணி ஆகும். அடுத்த ஷோ இரவு பதினோரு மணிக்கு துவங்கி நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணிக்கு முடியும் ! (என்ன கண்ணை கட்டுதா?) ஒரு முறை செட் போட்டால், குறைந்தது ஏழு முதல் பத்து நாள் வரை ஷூட்டிங் நடக்கிறது.. தினம் மூன்று ஷோவாக...இப்படி ஒரே வாரத்தில் 20 , 25 பகுதிகளை எடுத்து முடித்து விட்டு அதைதான் அடுத்த சில மாதங்களுக்கு ஒளி பரப்புகிறார்கள் !! நீங்கள் இரண்டாவது ஷோவில் பேசுகிறீர்கள் என்றால் மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்பார்கள். நீங்கள் அலறி அடித்து ஒரு மணிக்கு போனால் முதல் ஷோ வில் பாதி கூட முடிந்திருக்காது. ஒரு விதத்தில் ஷோ எப்படி நடக்கிறது, பேசும் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது என்பதை வெளியே உட்கார்ந்து பார்த்தால், நீங்கள் பேச உதவியாக இருக்கும் தான் ! ஒரு மணிக்கு சென்ற நீங்கள் மூன்று மணி வரை முதல் ஷூட்டிங் வேடிக்கை பார்ப்பீர்கள். பின் இரண்டு மணி நேரமாவது ப்ரேக் விடுவார்கள். (தொடர்ந்து பேசும் கோபிநாத் குரலுக்கு ரெஸ்ட் தேவை !!) நான்கு மணி நேர காத்திருப்புக்கு பின் செட்டில் உங்களை உட்கார வைப்பார்கள். பின் அசிஸ்டண்டுகள் நீங்கள் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்லுவார்கள். மைக்கை அடுத்தவரிடமிருந்து பிடுங்காதீர்கள் என்பது முக்கிய குறிப்பாய் இருக்கும். அப்புறம் கோபி வருவார். அவருக்கு ஒருவர் கோட் மாட்டி விடுவார். (ஆம் சினிமா நடிகர் போல் இன்னொருவர் கோட் மாட்டி விடுவது, மேக் அப் போடுவது நடக்கும் !) துவக்கத்தில் தலைப்பு குறித்து கோபி 15 நிமிடமாவது பேசுவார். (அதில் முக்கால் வாசி எடிட் ஆகி கொஞ்சம் தான் ஒளி பரப்பாகும் !) பின் ஏதேனும் ஒரு கேள்வி + அதற்கான பதில்களை கேட்டு நிகழ்ச்சி ஆரம்பிப்பார். இப்படி கேள்விகள் கேட்கும் போது உங்களுக்கு அது பற்றி கருத்து இருந்தால் கையை தூக்கினால் மைக் உங்களுக்கு வரலாம். ஆனால் நிறைய பேர் இப்படி பேச விரும்புவதால் மைக் எப்போது வரும் என சொல்ல முடியாது. மைக் உங்கள் கைக்கு வர சிறந்த வழி உங்கள் இரு பக்கமும் அமர்ந்துள்ளோர் பேசி முடித்ததும் அவரிடமிருந்து நீங்கள் மைக் வாங்கி பேசுவது தான். குறிப்பிட்ட சில கருத்துக்கள் ஒட்டி விவாதம் நகரும் போது உங்களுக்கு அது பற்றி சொல்ல நிச்சயம் நல்ல பாயின்ட் இருக்கும். மைக் மைக் என்று கேட்டாலும் அப்போது கிடைக்காது. பின் உங்கள் அருகில் இருப்பவர் மூலம் மைக் வரும்போது உங்களுக்கு அதிக ஈடு பாடு இல்லாத விஷயம் போய் கொண்டு இருக்கும். நீங்கள் பழைய கேள்வியை நினைவு படுத்தி பேச ஆரம்பித்தால் " அந்த டாபிக் முடிஞ்சுடுச்சு. இப்போ உள்ளதை பேசுங்க" என்பார்கள். இது தான் பேசுவதில் உள்ள பெரிய சிரமம் ! சரியான நேரத்தில் மைக் உங்களுக்கு வரா விடில் உங்கள் கருத்துகளை நன்கு சொல்ல முடியாது ! தலைப்பு குறித்த கேள்விகளாக கேட்டு அனைவர் கருத்தும் கேட்கும் ரவுண்டுகளே நான்காவது இருக்கும் என்பதால் நீங்கள் நான்கு முறை பேச வாய்ப்பு வரலாம். ஒவ்வொரு ரவுண்டிலும் பேச முயன்றால்தான் சில எடிட் ஆனால் கூட மீதம் சில வரும். நீங்கள் பேசியதே இரு முறை தான் எனில் அதில் ஒன்று எடிட் ஆகி ஒரு முறை மட்டும் வர வாய்ப்பு உண்டு. ஓரிரு முறை மட்டுமே பேசினால், உங்கள் நண்பர்கள் "நீ பேசுனியா என்ன? நான் பார்க்கவே இல்லியே " என துக்கம் விசாரிக்கும் நிலைமை வந்து விடும் ! அடுத்து மைக் கிடைத்து பேசும் போது ஒரு சில நிமிடங்களாவது பேசுகிறது போல் பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் பேச ஆரம்பித்து 15 வினாடிகள் கழித்து தான் கேமரா உங்கள் க்ளோஸ் அப் காட்டும். 30 வினாடிக்கு குறைவாக பேசினால் நீங்கள் தான் பேசினீர்கள் என்பது டிவியில் பார்த்தால் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்களை கிட்டே காண்பிப்பதற்குள் அடுத்த நபரிடம் கேமரா சென்று விடும் ! டிவியில் வருகிற மாதிரி ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ப்ரேக் விட மாட்டார்கள். ஓரிரு மணி நேரம் விவாதம் தொடர்ந்து நடக்கும். கடைசியில் பரிசெல்லாம் குடுத்து முடித்த பிறகு தான் ப்ரேக்குக்கும், பிரேக் முடிந்து திரும்ப வருவதற்கும் கோபி ஒரே நேரத்தில் பேசுவார். (அடுத்தடுத்து அவர் இதை பேசுவதை பார்க்க வேடிக்கையாக தான் இருக்கும் !) லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்: அவர்கள் ஒவ்வொரு முறை ப்ரேக் விடும் போதும் ரெஸ்ட் ரூம் சென்று வந்து விடுவது நல்லது. ஒரு முறை அய்யாசாமி கலந்து கொண்ட போது ஏசி குளிரில் இது பெரிய பிரச்சனை ஆகி விட்டது. " இதோ பிரேக் விட்டுடுவாங்க. போயிடலாம், போயிடலாம் " என பொறுத்து பொறுத்து பார்த்து " டேய் நிறுத்துறீங்களா? இல்லியா? டேன்க் வெடிச்சிடும்பா " என அய்யா சாமி கத்தும் முன் நல்ல வேளையாக ப்ரேக் விட, மிகுந்த கோபத்துடன் முதல் ஆளாக அய்யாசாமி செட்டை விட்டு வெளியேறினார் ..ரெஸ்ட் ரூமுக்கு !