கண்சிவந்தால்...... படிப்பு கெடும்....
ஸ்கூல் பிள்ளைங்களுக்கு திடீர்னு ஏதோ பார்வைக் கோளாறுனு கண் டாக்டர் கிட்ட கூட்டிட்டு வருவாங்க. அப்படி வரும்போது தான் கெரட்டோகோனஸ்'னு சொல்கிறோம். பிறப்புலேயே குழந்தையோட கருவிழி பலமில்லாம இருக்கும். வளர, வளர அதோட வடிவம் கிராஸா மாறும். பவர் அதிகமாகும்.
அலர்ஜியா இருக்குமோனு அவங்களாவே தப்பா நினைச்சுட்டு, அந்தப் பிரச்சனையை அலட்சியப்படுத்துவாங்க. கண்கள்ல அரிப்போ, சிவப்போ, இருந்தா கண்களைப் போட்டு கசக்காம சுத்தமான குளிர்ந்த தண்ணீர்ல கழுவிட்டு தாமதிக்காம கண் மருத்துவரைப் பார்த்தா, அவங்க கார்னியல் டோபோகிராஃபிங்கிற டெஸ்ட் முலமா, கெரட்டோகோனாஸ் பாதிப்பை உறுதி செய்வாங்க
இந்தப் பிரச்சனையை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்து விட்டால் சிகிச்சையும் சுலபம்
முதல் கட்டமா இருந்தா, கண்ணாடி போடறது மூலமா சரி பண்ணலாம். அதுக்கடுத்த கட்டம்னா, கான்டாக்ட் லென்ஸ் பரிந்துரைக்கப்படும். ஆரம்பக்கட்ட சிகிச்சைல ரிபோஃப்ளேவின் கலந்த கண்களுக்கான ஸ்பெஷல் டிராப்ஸ் போட்டு குறிப்பிட்ட அலைவரிசையில பிரத்யோக லைட்டை செலுத்தி
கடைசி கட்டம்னா கார்னியல் டிரான்ஸ்பிளான்ட்டுனு சொல்லப்படற விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்....