Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

கருத்தடை அறுவை சிகிச்சை

கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கருத்தரிக்கலாம்...


பத்து மாதம்சுமந்து பெற்றெடுத்த குழந்தையைப் பறி கொடுத்து நிற்கிற சோகம், எந்தத் தாய்க்கும் நகர வேதனையே. அதிலும் அது ஒரே குழந்தையாக இருந்து, ஓரு குழந்தை போதும் என்கிற முடிவில் குடும்பக் கட்டுப்பாடும் செய்துவிட்ட பெண்களின் நிலை சோகத்தின் உச்சம். இருந்த குழந்தையும் போயாச்சு இன்னொரு குழந்தைக்கும் வழியில்லை என்கிற நிலையில் அவர்களது நிலை?

குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் குழந்தை பிறக்க வழி செய்யும் வசதி மருத்துவத்தில் உண்டு என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். டியூபோபிளாஸ்டி எனப்படுகிற அந்த அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

கர்ப்பப்பைக்கும் பக்கத்துல உள்ள குழாய்லதான் கருமுட்டையும், உயிரணுக்களும் சந்திக்கும். குழந்தை வேண்டாம்னு முடிவு பண்றவங்களுக்கு, இந்த பாதையை வெட்டிட்டா, அந்த சந்திப்பு நிகழாது. கருமுட்டை உற்பத்தி இருக்கும். ஆனா அது உயிரணுக்களை சந்திக்க வாய்ப்பில்லாம, கர்ப்பம் தரிக்காது. இதைத்தான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைனு சொல்றோம்.

இதை பண்ணின பிறகு சில பெண்களுக்கு துரதிர்ஷ்டவசமா, முதல் குழந்தை இறந்து போகலாம். இன்னொரு குழந்தை வேணும்னு நினைக்கிறவங்களுக்கு வெட்டப்பட்ட குழாய்களை மறுபடி சேர்த்து தைக்கிறதுத்தான் டியூபோபிளாஸ்டினு பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைக்குப் பிறகு அந்தக் குழாய்களோட நீளம் ஒரளவு குறையும். போதுமான நீளம் இருக்கிற பட்சத்துல டியூபோபிளாஸ்டி சிகிச்சை சாத்தியம்.

முன்னலாம் வயிற்றை கிழிச்சி பெரிய ஆபரேஷனா பண்ணிட்டிருந்த இந்த சிகிச்சையை இன்னிக்கு வயிற்ற கிழிக்காம லேப்ராஸ்கோப் முறைலயே பண்ணிடலாம். மறுபடி இணைச்சு தைக்கப்பட்ட குழாய்கள் சரியா இயங்குதானு சரி பார்க்க, அதுக்குள்ள ஒரு விதமான 'டை' மாதிரியான திரவத்தைச் செலுத்திப் பார்ப்போம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாசம் பொறுத்திருந்து அடுத்தடுத்த மாசங்கள்ல அவங்க கருத்தரிக்க முயற்சிக்கலாம்.

கருமுட்டை உற்பத்தி நல்லா இருக்கிற வயசு வரை இந்த சிகிச்சை பலன் தரும். அதே சமயம் இது 100 சதவீதம் பலனளிக்கக் கூடியதுனு சொல்ல முடியாது. குழாய்களோட செயல்திறன்ல கோளாறு இருந்தாலோ, அதுக்குள்ள தொற்று ஏற்பட்டிருந்தாலோ இந்த சிகிச்சை பலன் தராமப் போகலாம். டியூபோபிளாஸ்டி முறைல குழந்தை பெற முடியாதவங்க டெஸ்ட் டியூப் முறை பலன் தரும்