Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

online study loan help:ஆன்லைனில் உதவித்தொகை

கல்விக்கென்று பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து மத்திய, மாநில  அரசுகள் மாணவர்களை ஊக்குவிக்கின்றன. மேலும் மாநில அரசு இலவச சைக்கிள், மதிய உணவுத்திட்டம்,  இலவச மடிக்கணினி( laptop) போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் அளித்து வருகின்றது.

எனினும் இவை மட்டுமே அரசு அளித்துவரும் நலத்திட்டங்களா?

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், ஆதிதிராவிடர், மழைவாழ் மக்கள்,
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என
பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். இவர்கள்  கல்லூரி சென்று பயில தமிழக அரசு உதவித்தொகை அளிக்கின்றது. உதவித்தொகையை பெறுவது எப்படி என்று தெரியாத காரணத்தால் பல மாணவர்கள் உதவித்தொகை பெறாமலும் கல்லூரி படிப்பைத் தொடர முடியாத நிலையிலும் உள்ளனர். மாணவர்களின் இந்த தடுமாற்றத்தை போக்கவே கரங்களின் விரிவான கட்டுரை இதோ


உதவித்தொகையை அந்தந்த ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களில் வரிசையில் நின்று விண்ணப்பம் பெற்று அதற்கு பிறகு அதில் கேட் கப்பட்டுள்ள வருமானச்சான்று போன்றவைகளை வாங்கி, கல்லூரிச்சென்று முதல்வர் ஒப்பம் பெற்று மறுபடியும்  ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  அலுவலகம் சென்று கொடுக்க வேண்டும். இதெல்லாம் முடிந்த பிறகு உங்கள் தொகை கல்லூரிக்கு வங்கி காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதனைக் கல்லூரியில்  பெற்று மீண்டும் வங்கிக்குச் சென்று உங்கள் சேமிப்பு கணக்கில் கலெக்சனுக்கு போட வேண்டும். 2 நாட்கள் கழித்து நீங்கள் வங்கியில் பெற்றுக்கொள்ளலாம். 

இந்த நிலை தற்போது மாறியுள்ளது. நீங்கள் எங்கேயும் வரிசையில் நிற்கத் தேவையில்லை. எளிமையான முறையில் எல்லா வேலையும் முடித்து, உங்கள் வங்கிக்கணக்கில் நேரடியாகவே டெபாசிட் ஆகிவிடும் முறைதான் ஆன்லைன் விண்ணப்பம்  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை :-
  1. உங்களுக்கென்று இ-மெயில் ID கண்டிப்பாக இருக்க வேண்டும்.

2. உங்கள் பெயரிலேயே வங்கியில் சேமிப்பு கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.


3. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கிளைக்கென்று IFSC CODE மற்றும் MICR CODE இருக்கும். அவற்றை உங்கள் கிளையில் மட்டுமே நீங்கள் கேட்டு பெற முடியும். இந்த மூன்றையும் பெற்றுக்கொண்ட பிறகு ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் 

SC/ST மாணவர்கள்

மாணவ பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1,00,000/-த்திற்கு மேல் இருத்தல் கூடாது.

கலைக்கல்லூரி மாணவராக இருந்தால் tuition fee ரூ. 4,000க்கு மேல் பெற முடியும். மேலும் விடுதி மாணவர்களுக்கு ரூ.7,500/- கூடுதலாக கிடைக்கும்.

பொறியியல் மாணவராக இருந்தால் ரூ. 10,000/-க்கு மேல் பெற முடியும். மேலும் விடுதி மாணவர்களுக்கு ரூ. 10,000/- கூடுதலாக கிடைக்கும்.
ரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் அனைத்து SC/ST மாணவர்களும் உதவித்தொகை பெறலாம்.


BC/MBC மாணவர்கள் 

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2,00,000/-த்திற்கு மேல் இருத்தல் கூடாது.

கலைக்கல்லூரி மாணவராக இருந்தால் tuition fee ரூ. 4,000க்கு மேல் பெற முடியும். மேலும் விடுதி மாணவர்களுக்கு ரூ.7,500/- கூடுதலாக கிடைக்கும்.

பொறியியல் மாணவராக இருந்தால் ரூ. 10,000/-க்கு மேல் பெற முடியும். மேலும் விடுதி மாணவர்களுக்கு ரூ. 10,000/- கூடுதலாக கிடைக்கும்.

குறிப்பு :-

அரசு கல்லூரியில் பயிலும் BC/MBC மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெறலாம். தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெற முடியாது.

BC/MBC சிறுபான்மையின  மாணவர்கள்

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2,00,000/-த்திற்கு மேல் இருத்தல் கூடாது.

கலைக்கல்லூரி மாணவராக இருந்தால் tuition fee ரூ. 6,000க்கு மேல் பெற முடியும். விடுதி செலவினை பெற முடியாது.

குறிப்பு :-

அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் அனைத்து சிறுபான்மையின மாணவர்களும் உதவித்தொகை பெறலாம்.

தற்போது விண்ணப்பிக்கும் முறை

சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. ஏனைய மாணவர்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளிவரும்.

http://momascholarship.gov.in/minority_scholarship/tempStudentEntry.html

1. மேலே உள்ள இணைய முகவரியில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தவுடன் உங்களது இ - மெயில் முகவரிக்கு TID ( Temporaray Identity) எண். அனுப்பப்படும்.

2. இ -மெயில் மூலம் பெறப்பட்ட ID யினை விண்ணப்பத்தில் கேட்கப்படும் இடத்தில் குறிப்பிடவும்.

3. விண்ணப்பங்கள் பூர்த்தியாகும் வரை இணையப்பக்கத்தினை க்ளோஸ் செய்யக்கூடாது. பூர்த்திசெய்த பின் விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

4. பிரிண்ட் எடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை கல்லூரி முதல்வரிடம் கையெழுத்து வாங்கி சம்மந்தப்பட்ட (ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  அலுவலகம்) அலுவலகங்களுக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தாலே போதும். 

5. வருமானச் சான்றுதலை கல்லூரியில் கொடுத்திருக்க வேண்டும்.

6. உங்களது விண்ணப்பம் சரிப்பார்க்கப்பட்டு தகுதியுடையவர் என்றால் PID (Permanent Identity) எண் உங்களது இ -மெயிலுக்கு அனுப்பப்படும். இந்த PID உங்களது உதவித்தொகையின் நிலை பற்றி தெரிந்து கொள்ள உதவும்.


7. இறுதியாக நீங்கள் தகுதியானவர் என்றால் டிசம்பர் மாத கடைசிக்குள்  உதவித்தொகை நேரடியாக உங்களது வங்கிக் கணக்கிற்கே அனுப்பி வைக்கப்படும்.(thanks-karankal.com)