Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

நித்தியானந்தா யாரு ?yaru intha nithiyanantha?


மதுரை ஆதினத்திற்கு நித்தியானந்தா தகுதியானவரா?: ஓர் அலசல்
மதுரை 293வது ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள சுவாமி நி்த்தியானந்தா கடந்த 2010ம் ஆண்டிற்கு முன்பு வரை உலக ஆன்மீகத் தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டவர். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் ஆன்மீக ரசிகர்களை தன் பால் ஈர்த்துக் கொண்டவர்.
இந்நிலையில், நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் இணைந்த காணொளிக் காட்சிகள் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் எரிமலை போல் வெடிக்கத் தொடங்கியது. ஒரு சாதாரண மனிதன் இந்த காரியத்தை செய்தால் இந்த சமுதாயம் கண்டுகொள்ளாது. ஆனால் நான்கு பேர் மதிக்கக்கூடிய ஒரு ஆன்மீகத் தலைவர் செக்ஸ் விடயங்களில் ஈடுபட்டு, அது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டால் என்னவாகும் என்று 2010ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை வெடித்து வருகின்ற காட்சிகளின் மூலம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்த விவகாரத்தில் சிக்கி கைதான நித்தியானந்தா ஒன்றரை மாதங்கள் கழித்து வெளியே வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மதுரை ஆதீனமடத்தின் 293வது இளைய சன்னிதானமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். முடிசூடிய சில மணி நேரங்களிலேயே, நடிகையுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட நித்தியானந்தா, ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நியமித்தது சரியா? என்று இந்து அமைப்புக்கள் கோஷமிட்டபடி போராட்டத்தில் களமிறங்கினர். இந்த போராட்டம் இன்றைய திகதி வரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிக்கிறது.
இந்து அமைப்புகளின் இப்போராட்டத்திற்கு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததற்கு மூத்த ஆதீனம் அருணகிரி ஞான சம்பந்தரே கடைசியில் முக்கிய காரணமாக அமைந்து விட்டார். தொடக்க காலத்தில் திமுகவின் பிரதான நாளிதழான முரசொலி நிருபராக பணியாற்றி இவர், பிற்காலங்களில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு பின்பாட்டு பாடியவராக செயற்பட்டார். ஆன்மீக மடாதிபதி என்று சொல்வதை விட பொதுமக்கள் அரசியல் மடாதிபதி என்றே அழைத்தனர்.
இருப்பினும் மதுரை ஆதீன மடத்திற்கு இவரால் எந்த ஒரு இழுக்கும் வரவில்லை. சமீபத்தில் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதை தவிர…
நித்தியானந்தா இளைய ஆதினமாக நியமிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பிரச்சினைகள் மதுரை ஆதீனத்திற்கு வந்தாலும் எதையும் கண்டுகொள்ளவில்லை அருணாகிரி சுவாமி. மாறாக சிவனும் பார்வதியும் தன்னுடைய கனவில் வந்து அருணாகிரியே… பெங்களூரில் வசிக்கும் என்னுடைய பக்தர் நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக உனக்கு கீழ் நியமித்துக் கொள் என்று சொன்னதாக ஊடகங்களுக்கு பளிச்சென்று பேட்டி கொடுத்தார்.
இதற்கிடையில் போராட்டங்கள் வலுவடையத் தொடங்கியது. காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், ரஞ்சிதா என்ற நடிகையுடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நித்தியானந்தா எப்படி மதுரை ஆதீன மடத்திற்கு இளைய சன்னிதானமாக வரமுடியும் என கூக்குரலிட்டார். அவர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார்.
மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு சென்று மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூறியுள்ளார். இது தவறான செயல் என்றார். மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.
நித்தியானந்தா போன்றவர்களுக்கான பதவி அல்ல இது. அவர் இந்தப் பதவிக்கு வர அருகதை இல்லை. தனது பெயரை முதலில் சரி செய்து விட்டுத்தான் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். மதுரை ஆதீனம் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தனது பாதுகாவலர்களைக் கூட அவர் பெங்களூருக்குக் கூட்டிச் செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
எந்த விதமான முறையான அம்சங்களும் இந்த விவகாரத்தில் கையாளப்படவில்லை. இது பெரும் நகைச்சுவையான ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதேசமயம், இந்து மக்கள் மனதளவில் புண்பட்டுப் போயுள்ளனர் என்றார் சம்பத்.
மேலும் அவர், மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்றால் தன் மீதுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலையாகலாம் என நினைத்து பல கோடி ரூபாய் கொடுத்து இந்த பதவியை வாங்கியுள்ளார்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் கூறுகையில் தனது வாரிசாக மதுரை ஆதீனம் தேர்ந்தெடுக்கும் நபரை ஏற்கவே முடியாது. இது குறித்து நாங்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதேபோல விஸ்வ இந்து பரிஷத்தும் மதுரை ஆதீனத்தின் முடிவை விமர்சித்துள்ளது. இதுகுறித்து நெல்லைக்கண்ணன், ஆதீனத்தில் இருந்து நித்தியானந்தா வெளியேற்றப்பட வேண்டும். புதிய இளைய ஆதீனத்தை தமிழகத்திலுள்ள அனைத்து ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவை குழு கேட்டுக்கொள்கிறது.
நித்யானந்தா தன் மீதுள்ள கிரிமினல் குற்றத்தில் இருந்து தப்பிக்க ஆதீனத்தில் புகுந்துள்ளார். அவரை வெளியேற்றும் வரை ஓய மாட்டோம் எனக் கூறினார். மாநாட்டில் பங்கேற்ற தருமபுர ஆதீனம் குமாரசாமி தம்பிரான்: பாலியல் குற்றத்தில் சிக்கிய நித்யானந்தாவை ஆதீனமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது. இளைய ஆதீனம், தம்பிரானாக இருந்திருக்க வேண்டும், 16 இடங்களில் திருநீறு பூச வேண்டும், தலை முடியை அகற்ற வேண்டும் போன்ற மரபுகள் மீறப்பட்டுள்ளன.
இது குறித்து வேளாக்குறிச்சி ஆதீனம்: இந்த பிரச்னையில் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆதீனத்தின் புனிதத்தை காக்க, களங்கத்தை துடைக்க நித்யானந்தா வெளியேற்றப்பட வேண்டும்.
இதுகுறித்து திருப்பனந்தாள் ஆதீன தம்பிரான்: மதுரை ஆதீனம் தன் கனவில் சிவபெருமான் தோன்றி, நித்யானந்தாவை நியமிக்க சொன்னதாக கூறுகிறார். அதே சிவபெருமான் தான் எங்கள் கனவிலும் தோன்றி நித்யானந்தாவை வெளியேற்றி ஆதீனத்தை காக்கும்படி சொன்னார். அதனால் தான் எதிர்க்கிறோம். நீக்கும் வரை ஓயமாட்டோம் என்றார்.
இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களுடைய கருத்துக்களை வெளியிட சுவாமி நித்தியானந்தா, இந்த பிரச்சினைகள் அடங்கும் விதமாக ஒரு பேட்டியில், ஆளுங்கட்சியான அதிமுகவின் அமோக ஆதரவுடன் தான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 293வது மதுரை இளைய ஆதீனம் பதவி, சுவாமி நி்த்தியானந்தா தகுதியானவரா, இல்லையா? என்பதை பொது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்நிலையில் சுவாமி நித்தியானந்தா மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் வெடித்து வருகின்றது.
இதற்கிடையே நித்தியானந்தா மீது அவரது பெண் சீடர் ஆர்த்தி என்பவர் பகிரங்க புகார் ஒன்றை கர்நாடாக பொலிஸாரிடத்தில் தெரிவித்தார். நித்தியானந்தா தன்னை வசியப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததை தொடர்ந்து, நித்தியானந்தாவிற்கு எதிராக போர்க் கொடி தூக்கி வந்த இந்து மற்றும் சமூக அமைப்புகளுக்கு, கொழுந்து விட்டெரியும் தீ மேல் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.
மறுபடியும் தங்களது போராட்டத்தை அதிகப்படுத்த ஆரம்பித்தனர். இதை கட்டுப்படுத்த வழிதெரியாத நித்தியானந்தா தன் மீது புதிதாக எழுந்துள்ள பாலியல் புகாரை அகற்ற நினைத்தார். இதற்காக கர்நாடகா பிடதி ஆசிரமத்தில் ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்.
கன்னட டிவி நிருபர்கள், பத்திரிக்கை நிருபர்கள் என அனைவரும் குவிய ஒவ்வொருவரும் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். இந்த கேள்விகளை நித்தியானந்தா பதிலளித்தாலும் அவரது வலது கைகளான சீடர்கள் கொந்தளித்து கன்னட டிவி நிருபர்களை தாக்க ஆரம்பித்தனர்.
இதில் கன்னட இந்து அமைப்புகளும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பொழுது போராட்டம் மீண்டும் எரிமலைபோல் வெடிக்கத் தொடங்கியது. நிருபர்களை தாக்கிய சீடர்கள் கைது செய்யப்பட்டனர்.
நித்தியானந்தாவையும் கைது செய்யும் படி கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா அறிவித்தார். இதனால் சில நாட்களாக தலைமறைவான நித்தியானந்தா 13.6.2012 அன்று கர்நாடாக ராமநகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சரணடைந்த கையோடு பிணை மனுவும் தாக்கல் செய்தார். பின்பு அவரை ஒருநாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி கோமளா. அடுத்த நாள் நித்தியானந்தாவிற்கு பிணை வழங்கப்பட்டாலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காரணத்தினால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட ஒருவர் சிறைக்கோ நீதிமன்றத்திற்கோ செல்லக்கூடாதென வரைமுறை உள்ளது. இதைத்தாண்டியும் நித்தியானந்தா சென்ற காரணத்தினால் அவர் இளைய ஆதீனமாக இன்னும் நீடிப்பாரா என்று சந்தேகம் எழுந்தது.
இதற்கு மூத்த ஆதீனம் அருணாகிரி சுவாமி, நித்தியானந்தா பரிசுத்தமானவர் என்றும் அவர் தான் இந்த ஆதீனத்திற்கு அடுத்த வாரிசு என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் இன்று(15.6.2012) சுவாமி நித்தியானந்தா சிறையிலிருந்து பிணையில் வந்துள்ளார்.
அவருடைய கர்நாடக பிடதி ஆசிரம் சீல் வைக்கப்பட்ட காரணத்தினால் அவர் இனி அங்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இனி மதுரை ஆதீன மடத்திலேயே நித்தியானந்தா தன் மீதி ஆன்மீக வாழ்க்கையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இதனை மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.