கெட்டதை செய்து நன்றாக வாழும் நிலைமையும் ,நல்லவனாக இருந்த போதிலும் கஷ்டபடுவதும் , அவரவர்களின் எண்ண ஓட்டதின் அதிருவுகளால் என்பது எனது ஆராய்ச்சியின் முடிவு ..எனது ஆராய்ச்சி என்பது பல நூறு ஆண்டுகளாக சிந்தித்த மக்களின் ஆராய்ச்சி ,பல நூறு கோடி ஆண்டுகளாக மனித இனம் கண்டு பிடிக்க முனைந்த ஆராய்ச்சி ..இதை நான் தொடர்பவனாக இல்லாமல் இதனை நான் முடிப்பவனாக இருக்க ஆசை படுகின்றேன் ..
குழப்பம் நிறைந்தது தான் ஆன்மிகம் ..எந்த ஒரு மதமும் இதை செய்தால் நீ இதாக கடவாய் என்று வெளி படையாக கூறவில்லை ...எல்லாமே ஒரு திரை மறைவில் வைக்கப்பட்டு உள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது ....நான் எவ்வளவு தூரம் ஆன்மிகத்தில் சென்றாலும் எனது பகுத்தறிவும் இதனை செய்யாமல் எவ்வளவோ நபர்கள் சுகமாய் வாழ்ந்து ,விழுந்து போன இவ்வுலகம் என்னை ஏன் ஆன்மிகத்தில் தள்ளுகிறது என தோணும் ???
குழப்பத்தின் தெளிவை ஆன்மிகம் கற்று தரும் பொது மனிதன் ,புனிதவனாகலாம் ஆனால் இந்த மனித உலகம் மொத்தமும் புனிதமாவது எப்போது ??? ....
இதுவரை இந்த கட்டுரையும் ஆன்மிக நூல்களை போல் குழப்பமாக சென்றாலும் இனி எனக்கே உரிய ,எளிய பாணியில் தொடர்கின்றேன் ...
நான் பார்க்க போகும் பகுதிகள் நான்கு
1..ஆன்மா
2.நான்
3.என் எண்ணம்
4.கடவுள்
1..ஆன்மா
ஆன்மா என்றதும் என்னவோ ஏதோ போல் ஆன்மிகம் சித்தரிப்பதை நான் எதிர்கிறேன் ...ஆன்மிக குழப்பத்தின் உச்ச கட்டம் இந்த ஆன்மா குழப்பம் ...
சில நூல்கள் நாம் தான் ஆன்மா என்றும் சிலவை உன்னுள் இருக்கும் ஆன்மாவை என்றும் புரியாமலே பொடி வைச்சு பேசி பேசி ஒரு குழப்பத்தையே இது வரை விட்டு சென்றுள்ளதாக எனது எண்ணம் ..
ஆன்மா என்பது நீங்கள் தான் அது எங்கயும் உங்களுக்குள் ஒளிந்து இருக்க வில்லை அல்லது அது உங்களை விட்டு எதோ முதுகு தண்டிலோ அல்லது நாசி துலயிலோ மறைந்தும் இருக்கவில்லை,,அதை நீங்கள் உணர்ந்தும் இருக்க வேண்டியது இல்லை வேண்டியது விழிப்புணர்வே ..நான் அழிவற்ற ஆற்றல் என்ற எண்ணமே முக்கியம் ..நீங்கள் எதோ செய்தலும் எண்ண வலிமையுடன் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் வரும் ..நான் சில ஆற்றலின் தொகுப்பு ,நீங்களும் ஏன் ஒவ்வொரு உயிரும் அப்படியே பேச முடியாத ஆற்றல்கள் சேர்ந்து மாடையும் ,நடக்க முடியாத ஆற்றல்கள் சேர்ந்து பாம்பையும் உருவாக்கியது போல ஒரு சில கலவையான ஆற்றலின் தொகுப்பே மனித ஆன்மா ..நானும் நீங்களும் ..மற்றவை அழியலாம் சாரி அழியலாம் என்ற வார்த்தையே இங்கு தவறு எதுவும் அழிவதில்லை வேறு ஒரு ஆற்றலக மாறலாம் ..இது தான் மனிதனின் ஆன்மாவை பற்றி மிக பெரிய கண்டு பிடிப்பு "ஆன்மாவை (ஆற்றலை) ஆக்கவோ ,அழிக்கவோ முடியாது .ஒரு ஆற்றலை வேறு ஒரு ஆற்றலாக மாற்றலாம் "