Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

சிறுநீரகத்தில் கல்

சிறுநீரகத்தில் கல்லா?
பால் சாப்பிடாதீர்கள்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

பாலில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அது சிறுநீரகத்தில் கல்லை ஏற்படுத்திவிடும்'' என்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக, ""பால், தயிர், மோர் போன்றவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிடும்'' என்கிறார் சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஆர்.பாரி. சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்: ""பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ஸலேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்ஸலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்'' என்கிறார் அவர். ""நமது நாட்டில் சிறுநீரகக் கல் தோன்றும் பிரச்னை அதிகமிருக்கிறது. இதற்குக் காரணம் நமது வெப்பநிலைதான். அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன. நமது உணவுமுறையும் கூட இப்போது மாறிவிட்டது. பீட்ஸô, பர்கர் என்று சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். விலங்குகளின் புரதச் சத்து அதிக அளவில் நமது உடலில் சேர்கிறது. பழங்கள், காய்கறிகளைத் தேவையான அளவு சாப்பிடுவது இல்லை. இவையும் சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணம். உடல் உழைப்புக் குறைந்துவிட்டது. நடப்பதும் குறைந்துவிட்டது. இரு சக்கர வாகனங்களில் சென்று அலுவலகத்தில் ஏஸி அறையில் வேலை செய்வது என்று வாழ்க்கைமுறை மாறிவிட்டது. சிறுநீரகக் கற்கள் உருவாக இவையும் காரணம். முன்பைக் காட்டிலும் அதிக அளவு இப்போது பெண்களுக்கும் சிறுநீரகக் கல் பிரச்னை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பெண்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டதே. முன்பு பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள். இப்போது படிப்பு, வேலை என்று ஆண்களைப் போலவே அவர்களும் வெளியே செல்வதால், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. உடலுக்குத் தேவையான சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதில்லை. அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னவுடன், சிலர் ஒரே நேரத்தில் 1 லிட்டர் தண்ணீரைக் குடிப்பார்கள். அப்படி குடிக்கக் கூடாது. சாப்பாட்டுக்குச் சிறிது நேரம் முன்பும், சாப்பிட்ட பின்பும் இரண்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தலாம். தாகம் எடுக்கும்போதும் இடையிடையே தண்ணீர் அருந்தலாம். சிலர் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 1 லிட்டர், 2 லிட்டர் என்று தண்ணீரைக் குடிப்பார்கள். அப்படிக் குடித்துவிட்டு, அன்றைய நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும் சிறுநீரகக் கற்கள் தோன்றும். எப்போதெல்லாம் சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ அல்லது வேறு நிறமாகவோ போகிறதோ, எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நாம் நமது உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். சிறுநீரகத்திலோ, சிறுநீர் பாதையிலோ கற்கள் தோன்றிவிட்டால், அவற்றை அகற்ற நவீன மருத்துவமுறைகள் இப்போது வந்துவிட்டன. சிறுநீர் பாதையில் ஒரு கருவியை நுழைத்து கற்களை நீக்கும் முறையும் உள்ளது. சிறுநீரகத்தில் துவாரம் போட்டு கற்களை நீக்கும் முறையும் உள்ளது. சிறுநீரகக் கற்களை நீக்க வாழைத்தண்டு சாறை சிலர் அருந்துவார்கள். சிறுநீரகக் கற்கள் இதனால் உடலை விட்டு வெளியேறுமா? என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதே சமயம் வாழைத்தண்டு சாறு அருந்துவதால் உடலுக்கு எந்தக் கெடுதியும் இல்லை. வாழைத் தண்டு சாறு ஒரு சிறுநீர் பெருக்கியாக உடலில் செயல்படுவதால், அதிக அளவு சிறுநீர் வெளியேறும்
73