For more details;www.maduraimc.com |
2. கால்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு நேராக நிமிர்ந்து நிற்பது நல்லது.
3. உட்கார்ந்திருக்கும்போது நாற்காலியின் பின்புறத்தின் ஆதரவுடன் நிமிர்ந்து உட்காருவது நல்லது.
4. ஏதேனும் கனமான பொருளை எடுக்கும்போது முன்னால் குனிவதை தவிர்க்கவும். உங்கள் முதுகை நேராக வைத்துக்கொண்டு உங்கள் முழங்காலை வளைத்துப் பொருட்களை எடுக்கவும்.
5. கருத்தரித்திருக்கும் கடைசி மாதங்களில் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துக்கொண்டு உறங்குவது சௌகரியமாக இருக்கும்.
6. படத்தில் காட்டியுள்ள முறையில் படுத்துக் கொள்ளவும். அது உங்கள் வயிற்றுத் தசைகளை உறுதியாக்கும்.
7. சிறுநீர்க்குழாய் மற்றும் பெண்குறிக்கு அருகிலுள்ள தசைகள் வலுப்படும். மேலும் கைகளுக்கு ஓய்வு கிடைக்கும்.
8. குஷன் அல்லது தலையணைஆதரவுடன் சாய்ந்து உட்கார்ந்து கொள்வது இடுப்பு மற்றும் கீழ் இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகளுக்கு ஓய்வு கிடைக்கச் செய்யும்.
9. படத்தில் காட்டியுள்ளபடி முதுகை மசாஜ் செய்வது பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தியைத் தரும். முதுகுவலி மற்றும் மலச்சிக்கலையும் தவிர்க்கும்.
10. காலை சிறிது அகட்டி நிற்பது, அதன் பிறகு முன்பாதங்களில் அமர்வது (படத்தில் காட்டியுள்ளபடி) முதுகு வலியையும் மலச்சிக்கலையும் தவிர்க்கும்.
11. நேராக அமர்ந்து கொண்டு இரண்டு பாதங்களையும் இணைத்து கையால் பிடித்துக்கொண்டு முழங்கால்களை மேலும் கீழும் பட்டாம்பூச்சி இறக்கை போல அசைப்பது நல்லது. உங்கள் முதுகெலும்பில் மாற்றங்கள்!
கர்ப்ப காலத்தில் உடல் சமநிலையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் முதுகெலும்பின் இயல்பான வளைவுகள் இன்னும் அதிகரிக்கின்றன. மார்புப் பகுதியில் பின்னோக்கியும் வயிற்றுப் பகுதியில் முன்னோக்கியும் இவ்வளைவுகள் அதிகரிக்கின்றன. இது அடிவயிற்றின் இடையை சமாளிப்பதற்காக இயற்கையாகவே நிகழ்கிறது.