Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய:
1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.
6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.
7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.
9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).
10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.
11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.