Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

health tips

ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,'' தேவையான பொருட்கள்: ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், சுக்கு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம். செய்முறை: நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம். மருத்துவ பயன்கள்: வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.