Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

சர்க்கரை நோய்


சர்க்கரை நோய் என்றால் என்ன?

நமக்கு சக்தியை தருவது குளுக்கோஸ் என்கிற சர்க்கரை சத்து. எந்த உணவு சாப்பிட்டாலும் குளுக்கோஸ் இயக்க சக்தியாக மாற்றி ரத்தத்தின் வழியாக எல்லா உறுப்புகளில் இருக்கும் செல்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அப்படியே எடுத்து பயன்படுத்தி கொள்ள பல உறுப்புகளுக்கு தெரிவதில்லை. இதற்கு இன்சுலின் என்ற ஒரு இயக்குநீர்(ஹார்மோன்) தேவைப்படுகிறது.

அதாவது இன்சுலின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது பான்கிரியாஸ் என்ற கணையச் சுரப்பி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த சுரப்பியில் இருக்கும் பீட்டா செல்கள் ஆகும். இன்சுலின் உற்பத்தி உடலில் சீராக நடைபெறும்போது எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

ரத்தத்தில் சர்க்கரை அளவும் 80-120 மில்லி கிராம் அளவுக்குள் இருக்கிறது. ஆனால் இன்சுலின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும்போது உடல் உறுப்புகளின் செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளாமல் உடல் இயக்கத்துக்கு போதிய சக்தி கிடைக்காமல் போகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை கூடுகிறது. ரத்த தில் ஒரு குறிப்பிட்ட அளவை சர்க்கரை தாண்டும்போது கூடுதல் சர்க்கரையை வெளியேற்றியே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந் தம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தடுக்கிறேன் என்று சிறுநீரகம், உடல் தேவைக்கு அதிகமாகவே சிறுநீர் மூலம் சர்க்கரையை வெளியேற்றுகிறது. இந்த நிலை நீடிக்கும்போது உடலில் பல செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதனால் தான் சர்க்கரை நோயாளிக்கு களைப்பும், அசதியும் அதிக தண்ணீர் தாகமும் ஏற்படுகின்றது. சிறுநீர் மூலம் சக்தியை இழப்பதால் நீர் இழப்பு என்பது நீரழிவு நோய் ஆயிற்று.